உங்களது கடவுச்சொல்லை மீட்டமைக்க: கடவுச்சொல்லை மறந்துவிட்டேன் என்பதற்குச் சென்று உங்களது மின்னஞ்சல் முகவரியை உள்ளிடுங்கள். ஒரு புதிய கடவுச்சொல்லை உருவாக்க ஒரு இணைப்பு உங்களுக்கு மின்னஞ்சல் செய்யப்படும்.

पूरा सहायता लेख देखें

பயனர்கள் எங்களின் EPUB வடிவத்தை தங்களின் ஆப்பிள் கம்பியூட்டர்களில் மற்றும் iOS மொபைல் சாதனங்களில் (iPhone போன்றவற்றை) iBooksஐப் பயன்படுத்தி வாசிக்கலாம். 

 1. உங்கள் கணக்கிற்குள் நுழையவும்.

 2. பக்கத்தின் மேலே உள்ள தேடல் பெட்டியைப் பயன்படுத்தி ஒரு புத்தகத்தைத் தேடவும்.

 3. தேடல் முடிவுகளில் புத்தககத்தைக் கண்டறிந்த, ஃபார்மட் டிராப்-டவுன் மெனுவில் இருந்து EPUBஐ தேர்ந்தெடுத்து, பின்னர் தரவிறக்க பொத்தானை தேர்ந்தெடுக்கவும்.

 4. புத்தகம் பேக்கேஜிங்கை நிறைவு செய்த பின்னர் தயார்படுத்தப்பட்ட கோப்பினை தரவிறக்குவதற்கான விருப்பத்தேர்வினைத் தேர்ந்தெடுக்கவும்.

 5. ஆப்பிள் புத்தகங்கள் பொத்தானில் திறப்பதற்கான விருப்பத்தேர்வினைத் தேர்ந்தெடுக்கவும்.

 

पूरा सहायता लेख देखें

ஒவ்வொரு இணைய உலாவியும் மென்பொருள் திட்டமும் பல்வேறு இடங்களில் உங்களது புத்தகங்களை சேமிக்கலாம். விண்டோஸ் கணினிகளுக்கு, முதலில் உங்களது டவுன்லோட்ஸ் கோப்புறை அல்லது டாக்குமெண்ட்ஸ் கோப்புறையைப் பாருங்கள்.

அங்கே அந்த கோப்பினை காண முடியவில்லை என்றால், பதிவிறக்கப்பட்ட புத்தகத்திற்காக நீங்கள் உங்களது கணினியில் தேடவும் செய்யலாம். கோப்பின் பெயர் அந்த புத்தகத்தின் தலைப்பின் முதல் ஒருசில வார்த்தைகளாகத்தான் இருக்கும் மேலும் இடையிடையே அடிக்கோடு இருக்கும்.

ஒரு விண்டோஸ் கணினியில் ஸ்டார்ட் பொத்தானை கிளிக் செய்து சர்ச் என்பதைத் தேர்வு செய்வதன் மூலம் உங்களது கணினியில் நீங்கள் தேடலாம். அப்படியும் அந்த புத்தகத்தை உங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், நீங்கள் வாடிக்கையாளர் சேவை மையத்தைத் தொடர்பு கொள்ளலாம் அல்லது புத்தகத்தை மீண்டும் பதிவிறக்க முயற்சிக்கலாம். 

पूरा सहायता लेख देखें

ஒரு கணினி அல்லது ப்ரெயில் குறிப்பெடுக்கும்-சாதனத்தைப் பயன்படுத்தி பி.ஆர்.எஃப் கோப்புகளை பதிவிறக்க, தயவுசெய்து கீழுள்ள நிலைகளைப் பின்பற்றுங்கள். பி.ஆர்.எஃப் கோப்புகளை பதிவிறக்கம் செய்ய ஒரு டேப்லெட் அல்லது ஸ்மார்ட்ஃபோனைப் பயன்படுத்தினால் இந்த நிலைகள் செயல்படாது என்பதை தயவுசெய்து புரிந்துகொள்ளுங்கள்.

 1. உங்களது கணக்கிற்குள் நுழையவும்

 2. தேடல் பெட்டியைப் பயன்படுத்தி ஒரு புத்தகத்தைக் கண்டறிந்திடுங்கள்

 3. புத்தகத்தின் தலைப்பைத் தேர்வுசெய்யுங்கள்

 4. பதிவறக்க வடிவ ட்ராப் டவுன் (காம்போ) பெட்டியில் பி.ஆர்.எஃப் என்பதைத் தேர்வு செய்து, பின்னர் பதிவிறக்க பொத்தானை அழுத்தவும்

 5. கோப்பை திறக்கவா அல்லது சேமிக்கவா என்று உங்களிடம் கேட்கப்பட்டால், தயவுசெய்து சேமிக்கவும் என்பதைத் தேர்வுசெய்யுங்கள், பின்னர் அதை எளிதாக கண்டறியக்கூடிய ஒரு இடத்தைத் தேர்வுசெய்திடுங்கள்.

குறிப்பு: பெரும்பாலான இணைய உலாவிகள் இயல்பாகவே டவுன்லோட்ஸ் கோப்புறையில் கோப்புகளை சேமித்திடும்.

पूरा सहायता लेख देखें

புத்தகங்களைக் கேட்பதற்கு பல்வேறு வழிகள் உள்ளன. நீங்கள் ஒரு புத்தகத்தை எப்படி வாசிப்பது என்பதைத் தெரிந்துகொள்ள நீங்கள் முதலில் வாசிக்கும் கருவிகள் பக்கத்தைப் பார்க்க விரும்பலாம்.  

 • iOS அல்லது ஆண்டிராய்டு பயன்பாடுகள்
  • ஒரு புத்தகத்தின் உரையை குரல் வடிவில் வாசிக்கக்கூடிய டால்ஃபின்ஸ் ஈஸி ரீடர் போன்ற வாசிக்கும் கருவியை நீங்கள் பயன்படுத்தினால், நீங்கள் புத்தகத்தைக் கண்டறிந்து அதனைத் திறந்து அந்த வாசிக்கும் கருவியில் நேரடியாக அதனைக் கேட்கலாம்.
 • ஆப்பிள் புக்ஸ்
  • நீங்கள் ஆப்பிள் புக்ஸ் பயன்படுத்தி வாசிக்கும் பழக்கமுடையவர் என்றால், புத்தகத்தை இ.பி.யூ.பி வடிவில் பதிவிறக்கி அதை ஆப்பில் புக்ஸில் திறந்திடுங்கள், அது சத்தமாக வாசிக்கும் ஒரு சறப்பம்சத்தை வழங்குகிறது.
 • மைக்ரோசாஃப்ட் வேர்டு அல்லது எட்ஜ் உலாவி
  • நீங்கள் வேர்டைப் பயன்படுத்தினால், புத்தகத்தை டாக்ஸ் (DOCX) வடிவில் பதிவிறக்கி வேர்டில் திறந்திடுங்கள், அது சத்தமாக வாசிக்கும் ஒரு அற்புதமான ரீடர் அம்சத்தைக் கொண்டுள்ளது.
  • நீங்கள் எட்ஜ் உலாவியைப் பயன்படுத்தினால், புத்தகத்தை இ.பி.யூ.பி வடிவில் பதிவிறக்கி, உங்களது உலாவியில் திறந்திடுங்கள், அதில் சத்தமாக வாசிக்கும் ஒரு அற்புதமான ரீடர் அம்சம் உள்ளது.
 • ஆடியோ பிளேயர்கள் (டெய்ஸி ஆடியோ அல்லது எம்.பி3)
  • நீங்கள் ஒரு டெய்ஸி ஆடியோ அல்லது எம்.பி3 கோப்பு தேவைப்படும் ஒரு பிளேயரைப் பயன்படுத்தினால், இந்த இணையதளத்தில் இருந்து நீங்கள் புத்தகத்தை ஆடியோ கோப்பு வடிவில் கண்டறிந்து அதை பதிவிறக்கம் செய்ய வேண்டும். பின்னர் நீங்கள் அந்த கோப்பினை பிளேயருக்கு எடுத்துச்சென்று அதை இயங்கச் செய்து கேட்கலாம்.
  • ஆடியோ வடிவில் கிடைக்கக்கூடிய பெரும்பாலான புத்தகங்கள் கணினியின் குரல்களைப் பயன்படுத்துகின்ற "உரையிலிருந்து-பேச்சு-வடிவாக்கும்" (டி.டி.எஸ்) எஞ்ஜின் மூலமாக உருவாக்கப்படுகின்றன. இந்த டி.டி.எஸ் எஞ்ஜின் தற்போது ஆங்கில மற்றும் ஸ்பானிஷ்-மொழி புத்தகங்களை மட்டுமே உருவாக்க முடியும், ஆனால் விரைவில் அதிக மொழிகள் வர இருக்கின்றன.
  • அதிக டி.டி.எஸ் மொழிகள் சேர்க்கப்பட இருப்பதுடன், லைப்ரரி எதிர்காலத்தில் மனிதனால்-வாசிக்கப்பட்ட புத்தகங்களையும் சேர்க்க இருக்கிறது.
पूरा सहायता लेख देखें

DAISY மற்றும் BFR ஆகியன அணுகப்படும் பொருட்களுக்கான எண்முறை வடிவங்காளகும் (DAISY என்பது எண்முறை அணுகல் தகவல் அமைப்பு (Digital Accessible Information System) மற்றும் BFR என்பது பிரையிலி தயார் வடிவம் (Braille Ready Format) என்பதாகும்.

 • DAISY வடிவப் புத்தகங்களை ஒலி வழியாக மட்டும் படிக்கலாம் அல்லது ஒலியாகப் படிக்கப்படும் அதே நேரத்தில் ஒத்திசைவான வார்த்தை மேலுயர்த்தப்படலாம். உங்களுக்கு ஒலி மட்டும் தேவைப்படடால், நீங்கள் DAISY ஒலி தரவிறக்க வடிவத்தைத் தேர்ந்தெடுக்கலாம்.  நீங்கள் புத்தகத்தை கேட்க விரும்பினால் மற்றும் திரையில் வார்த்தைகளை உயர்த்திக்காட்ட விரும்பினால், எங்களின் DASIY உரை அல்லது படங்களுடனான DAISY வடிவத்தினை தேர்ந்தெடுக்கவும். இந்த கோப்புகளை அணுகுவதற்கான மென்பொருள் அல்லது மொபைல் செயலியை நீங்கள் வைத்திருக்க வேண்டும்.
 • BRF என்பது எண்இலக்க பிரெயிலி கோப்பு அதை புதுப்பிக்கத்தக்க பிரெயிலி காட்சி சாதனத்துடன் மற்றும் பிற உதவித் தொழில்நுட்பத்தடன வாசிக்க முடியும். உங்கள் கணக்கு விருப்பங்களில் உங்களுக்கு ஒப்பந்தமுள்ள அல்லது ஒப்பந்தமில்லாத பிரெயிலி வேண்டுமா என்பதை நீங்கள் தேர்வு செய்யலாம்.

எங்களின் புத்தகங்களை வாசிக்கும மென்பொருள் பற்றிய மேலும் தகலவ்களுக்கு, இங்கே செல்லவும். வாசிக்கும் கருவிகள்.

पूरा सहायता लेख देखें