ஒரு கணினி அல்லது ப்ரெயில் குறிப்பெடுக்கும்-சாதனத்தைப் பயன்படுத்தி பி.ஆர்.எஃப் கோப்புகளை பதிவிறக்க, தயவுசெய்து கீழுள்ள நிலைகளைப் பின்பற்றுங்கள். பி.ஆர்.எஃப் கோப்புகளை பதிவிறக்கம் செய்ய ஒரு டேப்லெட் அல்லது ஸ்மார்ட்ஃபோனைப் பயன்படுத்தினால் இந்த நிலைகள் செயல்படாது என்பதை தயவுசெய்து புரிந்துகொள்ளுங்கள்.

  1. உங்களது கணக்கிற்குள் நுழையவும்

  2. தேடல் பெட்டியைப் பயன்படுத்தி ஒரு புத்தகத்தைக் கண்டறிந்திடுங்கள்

  3. புத்தகத்தின் தலைப்பைத் தேர்வுசெய்யுங்கள்

  4. பதிவறக்க வடிவ ட்ராப் டவுன் (காம்போ) பெட்டியில் பி.ஆர்.எஃப் என்பதைத் தேர்வு செய்து, பின்னர் பதிவிறக்க பொத்தானை அழுத்தவும்

  5. கோப்பை திறக்கவா அல்லது சேமிக்கவா என்று உங்களிடம் கேட்கப்பட்டால், தயவுசெய்து சேமிக்கவும் என்பதைத் தேர்வுசெய்யுங்கள், பின்னர் அதை எளிதாக கண்டறியக்கூடிய ஒரு இடத்தைத் தேர்வுசெய்திடுங்கள்.

குறிப்பு: பெரும்பாலான இணைய உலாவிகள் இயல்பாகவே டவுன்லோட்ஸ் கோப்புறையில் கோப்புகளை சேமித்திடும்.

Audience
உறுப்பினர்
Help Topics
உறுப்பினர் - புத்தகங்களை பதிவிறக்கம் செய்தல் மற்றும் வாசித்தல்