ஒவ்வொரு இணைய உலாவியும் மென்பொருள் திட்டமும் பல்வேறு இடங்களில் உங்களது புத்தகங்களை சேமிக்கலாம். விண்டோஸ் கணினிகளுக்கு, முதலில் உங்களது டவுன்லோட்ஸ் கோப்புறை அல்லது டாக்குமெண்ட்ஸ் கோப்புறையைப் பாருங்கள்.

அங்கே அந்த கோப்பினை காண முடியவில்லை என்றால், பதிவிறக்கப்பட்ட புத்தகத்திற்காக நீங்கள் உங்களது கணினியில் தேடவும் செய்யலாம். கோப்பின் பெயர் அந்த புத்தகத்தின் தலைப்பின் முதல் ஒருசில வார்த்தைகளாகத்தான் இருக்கும் மேலும் இடையிடையே அடிக்கோடு இருக்கும்.

ஒரு விண்டோஸ் கணினியில் ஸ்டார்ட் பொத்தானை கிளிக் செய்து சர்ச் என்பதைத் தேர்வு செய்வதன் மூலம் உங்களது கணினியில் நீங்கள் தேடலாம். அப்படியும் அந்த புத்தகத்தை உங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், நீங்கள் வாடிக்கையாளர் சேவை மையத்தைத் தொடர்பு கொள்ளலாம் அல்லது புத்தகத்தை மீண்டும் பதிவிறக்க முயற்சிக்கலாம். 

Audience
உறுப்பினர்
Help Topics
உறுப்பினர் - புத்தகங்களை பதிவிறக்கம் செய்தல் மற்றும் வாசித்தல்