புத்தகங்களைக் கேட்பதற்கு பல்வேறு வழிகள் உள்ளன. நீங்கள் ஒரு புத்தகத்தை எப்படி வாசிப்பது என்பதைத் தெரிந்துகொள்ள நீங்கள் முதலில் வாசிக்கும் கருவிகள் பக்கத்தைப் பார்க்க விரும்பலாம்.  

 • iOS அல்லது ஆண்டிராய்டு பயன்பாடுகள்
  • ஒரு புத்தகத்தின் உரையை குரல் வடிவில் வாசிக்கக்கூடிய டால்ஃபின்ஸ் ஈஸி ரீடர் போன்ற வாசிக்கும் கருவியை நீங்கள் பயன்படுத்தினால், நீங்கள் புத்தகத்தைக் கண்டறிந்து அதனைத் திறந்து அந்த வாசிக்கும் கருவியில் நேரடியாக அதனைக் கேட்கலாம்.
 • ஆப்பிள் புக்ஸ்
  • நீங்கள் ஆப்பிள் புக்ஸ் பயன்படுத்தி வாசிக்கும் பழக்கமுடையவர் என்றால், புத்தகத்தை இ.பி.யூ.பி வடிவில் பதிவிறக்கி அதை ஆப்பில் புக்ஸில் திறந்திடுங்கள், அது சத்தமாக வாசிக்கும் ஒரு சறப்பம்சத்தை வழங்குகிறது.
 • மைக்ரோசாஃப்ட் வேர்டு அல்லது எட்ஜ் உலாவி
  • நீங்கள் வேர்டைப் பயன்படுத்தினால், புத்தகத்தை டாக்ஸ் (DOCX) வடிவில் பதிவிறக்கி வேர்டில் திறந்திடுங்கள், அது சத்தமாக வாசிக்கும் ஒரு அற்புதமான ரீடர் அம்சத்தைக் கொண்டுள்ளது.
  • நீங்கள் எட்ஜ் உலாவியைப் பயன்படுத்தினால், புத்தகத்தை இ.பி.யூ.பி வடிவில் பதிவிறக்கி, உங்களது உலாவியில் திறந்திடுங்கள், அதில் சத்தமாக வாசிக்கும் ஒரு அற்புதமான ரீடர் அம்சம் உள்ளது.
 • ஆடியோ பிளேயர்கள் (டெய்ஸி ஆடியோ அல்லது எம்.பி3)
  • நீங்கள் ஒரு டெய்ஸி ஆடியோ அல்லது எம்.பி3 கோப்பு தேவைப்படும் ஒரு பிளேயரைப் பயன்படுத்தினால், இந்த இணையதளத்தில் இருந்து நீங்கள் புத்தகத்தை ஆடியோ கோப்பு வடிவில் கண்டறிந்து அதை பதிவிறக்கம் செய்ய வேண்டும். பின்னர் நீங்கள் அந்த கோப்பினை பிளேயருக்கு எடுத்துச்சென்று அதை இயங்கச் செய்து கேட்கலாம்.
  • ஆடியோ வடிவில் கிடைக்கக்கூடிய பெரும்பாலான புத்தகங்கள் கணினியின் குரல்களைப் பயன்படுத்துகின்ற "உரையிலிருந்து-பேச்சு-வடிவாக்கும்" (டி.டி.எஸ்) எஞ்ஜின் மூலமாக உருவாக்கப்படுகின்றன. இந்த டி.டி.எஸ் எஞ்ஜின் தற்போது ஆங்கில மற்றும் ஸ்பானிஷ்-மொழி புத்தகங்களை மட்டுமே உருவாக்க முடியும், ஆனால் விரைவில் அதிக மொழிகள் வர இருக்கின்றன.
  • அதிக டி.டி.எஸ் மொழிகள் சேர்க்கப்பட இருப்பதுடன், லைப்ரரி எதிர்காலத்தில் மனிதனால்-வாசிக்கப்பட்ட புத்தகங்களையும் சேர்க்க இருக்கிறது.
Audience
உறுப்பினர்
Help Topics
உறுப்பினர் - புத்தகங்களை பதிவிறக்கம் செய்தல் மற்றும் வாசித்தல்