பெனெஃபெசன்ட் டெக்னாலஜி இன்க் (இனி "பெனெடெக்" என்று அழைக்கப்படும்) என்பது காப்புரிமை விதிவிலக்குகளின் விதிகளின் கீழ் செயல்படும் இணைய-அடிப்படையிலான புத்தக மற்றும் ஆவண அணுகல் சேவையான புக்ஷேர்® சர்விஸ் ("புக்ஷேர் சர்விஸ்") என்பதை உருவாக்கி அதனை செயல்படுத்தி வரும் ஒரு தொண்டு நோக்கிலான டெவலப்பர் நிறுவனமாகும். இந்த தேசிய பதிப்புரிமை விதிவிலக்குகள் இவ்வாறு சிறப்பு வடிவில் விநியோகிக்கப்படும் போது பதிப்புரிமை பெறப்பட்ட வேண்டிய எழுத்துவடிவங்களைப் பெறவும், செயல்முறைப்படுத்தவும் மற்றும் விநியோகிக்கவும் தகுதியுள்ள மாற்றுத்திறனுள்ள தனது உறுப்பினர்களுக்கு மட்டுமே பயன்படுத்தவும் புக்க்ஷேருக்கு அனுமதி வழங்குகிறது. 

அமெரிக்க பதிப்புரிமைச் சட்டம் §121 இன் 17 யூ.எஸ்.சியின் கீழும் மாராகேஷ் புரிந்துணர்வின் கீழும் தான் ஒரு அங்கீகரிக்கப்பட்ட அமைப்பு என்பதை பெனெடெக் குறிப்பிடுகிறது. பதிப்புரிமைப் பெறப்பட்ட புத்தகங்கள் பயன்படுத்தப்படுவதை தகுதி பெற்ற நபர்களுக்கு மட்டும் கட்டுப்படுத்தவும், மேலும் பதிப்புரிமை பெற்ற உரிமையாளர்களின் உரிமைகள் தவறாக பயன்படுத்தப்படுவதை தடுக்கவும் உருவாக்கப்பட்ட ஒரு டிஜிட்டல் உரிமைகள் மேலாண்மைத் திட்டத்தின்கீழ் புக்க்ஷேர் உறுப்பினர்களுக்கு அத்தகைய புத்தகங்கள் கிடைக்கச் செய்யப்படுகின்றன.